சர்வகட்சி மாநாட்டை பல அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பல அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டிற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய ஆகியன நிராகரித்துள்ளன.

இந்நிலையில் சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்ளாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.

இதேவேளை சர்வகட்சி மாநாட்டுக்கு சென்று இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...