சீனாவில் 133 பேருடன் சென்ற ‘சீனா ஈஸ்டர்ன்’ என்ற எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.
குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தபோது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலையில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மீட்புக் குழுக்கள் அனுப்பட்டுள்ள போதும் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
குறித்த விமானம், புறப்பட்டு சென்றபின் உரிய நேரத்துக்குள் குவாங்ஜு நகருக்கு விமானம் சென்று சேரவில்லை.இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் மலைப்பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது
இந்த விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலைமை தொடர்பில் என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதேநேரம், குவாங்சி பகுதியில் விமானம் மோதியதால் அங்குள்ள மலைப் பகுதியில் பாரியளவில் தீ ஏற்பட்டுள்ளது.