ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் தடவை அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அங்கு சற்றுமுன்னர், சிறப்பு அதிரடிப்படையினர் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பிரதேசம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...