தன்னையும் தனது குடும்பத்தாரையும் இனந்ததெரியாக சில நபர்கள் பின் தொடர்வதாகக் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிள் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, இன்று (10) முகப்புத்தகத்தில் நேரடி (லைவ்) காணொளி ஒன்றின் மூலம் தன்னையும் தனது குடும்பத்தாரையும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த நபர்கள் பின்தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தொலைபேசிகள் மற்றும் குடும்ப தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (5) மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த தாம் உட்பட அனைவரையும் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தமக்கு எச்சரித்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பான காணொளியில், ‘எனது குழந்தைகள் மிகவும் சிறியவர்கள், பாடசாலைக்குச் செல்லும் வழியில் சில ஆண்கள் மோட்டார் சைக்கிள்களில் குழந்தைகளைப் பின்தொடர்வதை நாங்கள் கவனித்தோம்.
நான் நேற்று ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன், எனது வாகனத்தின் பின்னால் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனது வாகனத்தைப் பின்தொடர்ந்தனர்.
எனது தொலைபேசி மற்றும் எனது கணவரின் தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. அது உண்மையாகவே நமக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும், இந்தப் போராட்டம் ஒரு தரப்பினரால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களாலும் நடத்தப்பட்டது. அரசாங்கத்துக்கு வாக்களித்த பெண்களும் வாக்களிக்காத பெண்களும் இருந்தனர்.
பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், அமைதியான போராட்டத்தின் ஊடாக நாட்டின் தலைவரிடம் பதில் கேட்க மட்டுமே செய்யப்பட்டது. அது தவறா?, ‘என்று ஹிருணிகா கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், போராட்டத்திற்கு வந்த பெண்களும் தற்போது ஆபத்தில் உள்ளனர், ஏனெனில் அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளது மற்றும் அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நாட்டுப் பெண்களாகிய நாங்கள் போராட்டத்தை நடத்துவதற்கு நேராக முன்னோக்கி இருந்ததால், இப்போது நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணரப்பட்டுள்ளோம், ‘என்று அவர் மேலும் கூறினார்.