புத்தாண்டு தினத்திற்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: எரிசக்தி அமைச்சர் உறுதி

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏப்ரல் புத்தாண்டு தினம் நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நிகர்வொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குதி செய்யத் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 215,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளில் அமைச்சிடம் இருப்பதாகக் கூறிய அவர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட இது போதுமானது என்றார்.

இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் ஏற்றுமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...