தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த கடமைகளைப் பொறுப்பேற்பார்.
திலக் பிரேமகாந்த இந்தப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், வன பாதுகாவலராக பணியாற்றினார்.
அவருக்கு பதிலாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் ஷர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். அதன்படி அவரது பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.