யானை தாக்கி சிகிச்சை பயனின்றி பெண் ஒருவர் பலி

Date:

யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாட்கலின் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் முருங்கன் – அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த யானை குடும்பப்பெண்ணைத் தாக்கியுள்ளது. இதன்போது 46 வயதுடைய சதனாந்தன் சுதா என்ற குடும்பப்பெண் உயிரிழந்தார்.

அதிகாலை ஒரு மணிக்கு வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெளியே வந்த குடும்பத்தலைவர் ரோச் லைட் அடித்து பார்த்துள்ளார். அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்துள்ளார். அப்போது யானை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்துள்ளது.

அதனால் கணவர் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார். வீட்டுக்கு வெளியில் இருந்த மனைவி ஓடி மறைவாக இருந்துள்ளார். வீட்டுக்குள் நுழையாத யானை மறைவில் இருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்த மரங்களையும் அடித்து முறித்துவிட்டுச் சென்றுள்ளது.

யானை தாக்கி படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் நான்கு நாள்களின் பின் நேற்று முற்பகல் 9 மணிக்கு சிகிச்சை பயனின்றி குடும்பப்பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...