தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு தேசிய அரசாங்கம் குறித்து எந்த அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தேசிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு மத்தியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்த செய்தியை உறுதியாக மறுத்துள்ளார்.
அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் கலந்துரையாடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் மூத்த ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பில் பிரதமர் ராஜபக்ச, விக்கிரமசிங்கவும் தானும் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தபோதும் அவர்களது கொள்கைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டிருந்ததால் கூட்டு அரசாங்கத்தில் இணைந்து செயற்பட முடியாது எனத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவை பாராட்டிய ராஜபக்ஷ, தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு தேசிய அரசாங்கம் குறித்து எந்த அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்கும் என்றும் கூறினார்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து அரசியல் கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மார்ச் 23 இரவு 10 மணிக்கு சந்திக்கும் சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த மாநாட்டில் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கடந்த வாரம் ஏன் அறிக்கை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் 4 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்ததாக பிரதமர் ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமர் உடனடியாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எரிபொருளுடன் கூடிய கப்பல்கள் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் வந்திருப்பதாக தெரிவித்தார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி தங்களிடம் இருப்பதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் பிரதமரிடம் தெரிவித்திருந்த நிலையில், கம்மன்பில இவ்வாறு தெரிவித்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், கம்மன்பிலவின் அறிக்கையானது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருந்ததுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உடனடி தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்தது. இதை தவிர்த்திருக்கலாம் என்றார்.
அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியும் தீர்க்கப்படும் என்றும் பிரதமர் நேற்றைய கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.