5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகளை இன்று வெளியிட நடவடிக்கை!

Date:

2021 தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதியன்று நடைபெற்றது.

குறித்த பரீட்சையில் தமிழ் மொழிமூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதேவேளை இப்பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...