ஏப்ரல் 2 ஆம் திகதி டீசல் பெற்றுக்கொள்ளவிருப்பதால், 2 ஆம் திகதிக்குப் பின்னர் நான்கு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டுக் காலப்பகுதி குறைக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சரக்கு ஏற்றிச் செல்லும் எண்ணெய் கப்பல் ஒன்றும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார்.
தற்போது இரண்டு டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பிறகு மற்ற ஆலைகளை இயக்க முடியும் எனவும்
எண்ணெயில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி எண்ணெய் கப்பல் நாட்டிற்கு வந்த பிறகு நிலையங்களை இயக்கலாம்.
மூன்று மட்டுமே. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது முழு திறனுடன் இயங்கி வருகின்றன. எனவே, ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நேரத்தை நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.