இந்திய கடன் வசதி மூலம் கிட்டத்தட்ட 80,000 மெற்றிக் தொன் டீசல் அடுத்த ஐந்து நாட்களில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை ஏறக்குறைய 80,000 மெட்ரிக் தொன் டீசலின் முதல் சரக்காக 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (1) வரவுள்ளது.
அதற்கமைய எஞ்சிய 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் இரண்டாவது கப்பல் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரவித்துள்ளது.
இதேவேளை டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்குவதால் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது