ஜனாதிபதி தலைமையிலான சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தது எதிர்க்கட்சி!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள சர்வக் கட்சி மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

அதேபோன்று அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாதிருக்க தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளான உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, வீமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் நவ சமசமாஜக்கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என என அறிவித்துள்ளன.

எனினும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது.

இதேவேளை ‘இது ஒரு ஊடக வித்தையாக மட்டுமே உள்ளது, இது எந்த பலனையும் தராது,’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

‘இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது மற்றும் சர்வ கட்சிமாநாடு மூலம் பயனுள்ள எதையும் கொண்டு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,’ என்று அவர் மேலும் கூறினார்.

கட்சியை புறக்கணிக்கும் தீர்மானம் குறித்து எஸ்.ஜே.பி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நாளை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என அத்தநாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...