குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 1.5 லிட்டர் குடிநீர் போத்தல் 90 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், முகக் கவசங்களின் விலையும் இன்று முதல் 30வீதமாக அதிகரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் அனைத்து வகைகளிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.