இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதி விடுதலை செய், புத்தர் சிலைக்கு அடிக்கல் நாட்டாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்கார்கள் ஈடுட்டனர்.
இதேவேளை பிரதமர் யாழ் விஜயத்தில் தென்மராட்சி மட்டு.வில் வண்ணத்தி பாலத்திற்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க ஏற்பாடாகியுள்ளது.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.