கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் எரிபொருட்களை வீடுகள் மற்றும் கடைகளில் பதுக்கி வைத்திருப்போரை கண்டறிவதற்காக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வழமை போன்று எமக்குத் தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
இதற்குக் காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்திருப்பதாகவும் சிலர் அதிக விலைக்கு விற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்டறிவதற்காக பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர் சம்மந்தமாக பொதுமக்கள் தகவல் தருமாறு பொலிஸாரால் கேட்கப்பட்டுள்ளது.
இச்சோதனையின்போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஸ் அறிவித்துள்ளது.