ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு!

Date:

பதவி விலகிய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) மாலை 05.00 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமியக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, சர்வதேச நாணய நிதித்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பில், இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...