”நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி பதவி நீக்கம் தீர்மானத்தின் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்”: லக்ஷ்மன் கிரியெல்ல

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவளிக்குமாறு விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

‘எங்களுக்கு அவர்களின் ஆதரவு தேவை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் 11 கட்சிகளின் மூத்த உறுப்பினர்களுடன் பேசினர்.

அதேவேளை குறித்த பிரேரணையின் வரைவை அவர்களுக்கும் காட்டினோம். எனவே, இரண்டு பிரேரணைகளுக்கும் தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்கு அவர்கள் தயங்குவதற்கு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் 11 கட்சிகளின் கூட்டமைப்பு தமது சுதந்திரத்தையும் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சீர்கேட்டில் இருந்து நாட்டைக் கொண்டு செல்லும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்தும் மொட்டுக்கட்சி ஆட்சியிலிருந்தும் விடுபட ஒரே வழி நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கம் ஆகும். அதற்கான முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ளது, இதற்கு அனைத்து அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் தேசபக்தர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

இதேவேளை இந்த பிரேரணைக்கு ஏற்கனவே ஏராளமான எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தனர். தேவையான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும்.

‘நாட்டின் அகலத்திலும் உள்ள மக்கள் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கத் தீர்மானத்தின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் ஒரு சர்வாதிகாரத்தின் முடிவையும் இறுதியில் ஒரு கொடுங்கோன்மையையும் காண விரும்புகிறார்கள்.
திருப்பி செலுத்தும் நேரம் வரும்போது ராஜபக்சவுக்கு ஆதரவளித்தவர்களை அவர்கள் மறக்க மாட்டார்கள்’ என கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...