நாட்டின் நெருக்கடி நிலைமையால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் குறைய வாய்ப்புள்ளது!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நாளாந்தம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஆயிரத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் டொலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன.

ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டொலர் மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம்.

அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவருவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இலங்கையின் சுற்றுலாத்துறை.

அதேநேரம், ‘இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் சுற்றுலாத் துறையில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலைமையினைசீராக்குவதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும். அதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கான தேவையான வசதிகள் மற்றும் அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...