மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்று ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தது. இ ந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளாக இருக்கும் தொழிலாளர் காங்கிரஸ் மக்களை பாதுகாப்பதே அதன் முழுமையான கடமை.
அப்படியிருக்கையில், மீரிஹான சம்பவத்தில் இடம்பெற்ற வன்முறைகளால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அவது தவறான செயற்பாடாகும்.
எனவே அசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நாங்கள் எப்பவோ எதிர்ப்பினை வெளிப்படுத்திவிட்டோம். அதனால் தான் சர்வகட்சி மாநாட்டிலும் பங்குபெறவில்லை.
மக்கள் சார்பாகவும் மக்களுக்காக அரசாங்கத்திலிருந்து விலகுவதே எமது நோக்கமாக இருக்கும். எனவே இன்னும் ஓரிரு தினங்களில் அரசாங்கத்திலிருந்து, விலகுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை மக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகளை வழங்க முடியாது என்றால், நாடாளுமன்றத்ததில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இடைக்கால அரசாங்கத்தை அமைத்தேனும் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், மீண்டும் மத்திய செயற்குழு கூடி அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான தீர்மானத்த எடுக்கும் எனவும் சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி அனுப்பி வைக்க உள்ளதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைரான மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.