மே மாதத்திலும் மின்வெட்டு தொடரலாம்: அமைச்சர் பவித்ரா

Date:

மே மாதத்திலும் மின்வெட்டு தொடர வாய்ப்புண்டு இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் தற்போது எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு டொலர் பற்றாக்குறையால் மின்சாரம் இல்லாமல் 13 மணி நேரம் வரை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் டீசல் ஏற்றுமதி சனிக்கிழமை வரவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

‘அது வந்துவிட்டால், மின்வெட்டு காலப்பகுதி நேரத்தைக் குறைக்க முடியும், ஆனால் மழை பெய்யும் வரை, இல்லையென்றால்மே மாதத்தில், மின்வெட்டு தொடரும். எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது, ‘என்று பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...