அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பிவித்து ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை அரசியல் தலைவரை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது. புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே எமது கோரிக்கையாகும்.
மக்கள் தங்கள் அடுத்த தலைவர்களை தீர்மானிக்க வேண்டும், வேறு யாராலும் அல்ல, ‘என்று தெரிவித்துள்ளார்.