அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சமகி ஜன பலவேகய குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
இதேவேளை” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.