தற்போது காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி உலக நாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் கோசம் எழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.