ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காஸா முழுவதும் உள்ள பலஸ்தீனியர்கள், இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலத்தில் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களை எதிர்த்து தெருக்களில் இறங்கினர்.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்துள்ளது.
ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீன ஆர்ப்பட்டக்காரர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் நடந்த மோதலில் 153இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
யூதர்களின் பாஸ்கா பண்டிகை, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை, முஸ்லிம்களின் ரமழான் மாதம், ஒன்றுடன் ஒன்று தொடர்புடயைது.
ஜெருசலேமில் இருக்கும் ‘அல்-அக்ஸா மசூதி’ முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமாகும். யூதர்கள் அதனை டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கின்றனர். பழங்காலத்தில் அங்கு இரண்டு கோயில்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை யூதர்கள் புனிதமாக கருதும் அல்-அக்ஸா மசூதியின் மேற்குச்சுவர் பக்கம், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட கற்களை வீசுவதற்கு முன்பாக, டஜன் கணக்கான முகமூடி அணிந்தவர்கள் பட்டாசுகளை வெடித்து அல்அக்ஸாவிற்குள் அணிவகுத்துச் சென்றதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பொலிஸார் மீது கற்களை வீசியதாகவும், பதிலுக்கு அவர்கள் ரப்பர் தோட்டாக்களால் சுட்டதாகவும் நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலால் காயமடைந்த 153 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு பகுதிக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாக நிகழ்ந்து வந்த பதற்றமான சூழலுக்கு இடையில் இன்றைய கலவரம், நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ரமழானுக்குப் பிறகு நடந்த மிகக் கடுமையான வன்முறைக்குப் பிறகு, ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட காசா நகரிலும் நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகார ஆணையத்தின்படி இஸ்ரேலியப் படைகள் 400 பாலஸ்தீனியர்களை கைது செய்தபோது, இஸ்ரேலியப் படைகள்இ இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகைக்காக கூடியிருந்தனர்.