‘ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் நாட்டு சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும்’:அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Date:

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது உயிர் மற்றும் உடைமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வன்முறையில் ஈடுபடாமலும், பொது மக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாமலும், நாட்டு சட்டங்களை பேணியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கேட்டுக்கொள்ளது.

நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது நாட்டு மக்களுக்கு தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக ரீதியாக போராடி வருகின்றனர்.

மக்கள் தமது கருத்துக்களையும் தேவைகளையும் ஜனநாயக ரீதியாக முன்வைப்பது அவர்களது உரிமையாகும். அத்துடன், எரிபொருள் பற்றாக்குறை, அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் துண்டிப்பு போன்ற பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ளும் இத்தருணத்தில் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறும், ஜனநாயக ரீதியில் போராடிவரும் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்றும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்நிலை அவசரமாக நீங்கி, நம் தாய்நாடு சுபீட்சம் பெற புனித ரமழான் மாதத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...