நாட்டின் மேற்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பகல் வேளையில் அதிக வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்நாட்களில் மேற்படி பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவதியுறுவதாகவும் அதிகளவு நீர் மற்றும் திரவ பானங்களை பருகுவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுக்க முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை ஏப்ரல் 03ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை மாலை வேளையில் மேல், தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், ஏப்ரல் 15ஆம் திகதிக்கு பின்னர் மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.