மூத்த சிங்கள நடிகரும் நகைச்சுவை நடிகருமான பண்டு சமரசிங்க மிலனில் உள்ள தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட மாட்டார் என வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூத்த நடிகர் பாண்டு சமரசிங்கவை, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இலங்கையின் தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், முன்னதாக இந்தப் பதவியில் பணியாற்றிய இசைக்கலைஞர் நீலா விக்கிரமசிங்க காலமானதையடுத்து, மிலனில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகப் பதவி வெற்றிடமாகவுள்ளது.
பந்து சமரசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.