இந்தியக் கடனுதவியின் கீழ் வழங்கப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் போன்ற சரக்குக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சுமார் 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஒரு சரக்கு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் பல்வேறு வகையான எரிபொருட்களின் ஒட்டுமொத்த விநியோகம் இப்போது 270,000 மெட்ரிக் தொன்னாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.