இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 10 இலட்சம் பேருக்கு அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகளை விதித்தது சவூதி அரேபியா

Date:

இந்த ஆண்டு மொத்தம் பத்து இலட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா அறிவித்தது.

கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையும் முடங்கியது.

இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை பற்றி தகவல் தெரிவித்த சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு,

‘இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு யாத்திரீகர்கள் என மொத்தம் ஒரு மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் சவூதி அரேபியா மற்றும் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிநாட்டிலிருந்து வரும் யாத்திரீகர்கள் கொரோனா எதிர்மறை பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் சில கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021இல் சில ஆயிரம் பேர் மட்டுமே புனித யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர், அதற்கு முந்தைய ஆண்டு 1,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ்ஜை அனைத்து முஸ்லிம்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முறைப்படை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக உலகின் மிகப்பெரிய மத யாத்திரைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தில் 2019 இல் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...