இன்றைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள்!

Date:

‘நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் முஸ்லிம்கள்
நிதானமாகவும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பல்வேறு வகையிலும் கஷ்டப்டும் எல்லொருக்கும் தம்மாலான சக உதவிகளையும்
வழங்கிட முன்வர வேண்டும்.’

தேசிய ஷூரா சபை கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஆலோசனை மன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார, அரசியல், நெருக்கடிகள் தொடர்பாக தேசிய சூரா சபை விசேட ஆலோசனை மன்றம் ஒன்றை கொழும்பில் நடத்தியது. தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலையேற்றம் அரசியல் கொந்தளிப்பு இவற்றின் விளைவாக மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியான சூழ்நிலை, இவற்றிலிருந்து நாட்டு மக்கள் வெளியேறுவதற்கான உபாயங்கள் போன்றவற்றை துறைசார் நிபுணர்கள் கருத்துக்களை பரிமாறினர். உலமாக்கள். புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயக்கங்களின் பிரதிநிதிகள், தேசிய சூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர்.

சூரா சபையின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல், நாட்டின் இன்றைய நிலவரத்தையும், அமர்வு கூட்டப்பட்ட நோக்கத்தையும் விளக்கினார். மற்றொரு உபதலைவர் சட்டத்தரணி ஜாவிட் யூசுப் நாட்டின் அரசியல் நிலைமையை விளக்கியதோடு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகளை எடுத்துக் கூறினார்.

அடுத்த உபதலைவர் ரீஸா யஹ்யா, மக்களும் நாடும் இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனைகளையும் அதற்கான பரிகாரங்களையும் தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் இன்றைய அரசியல் நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களை விளக்கி உரை நிகழ்த்தினார். சட்டத்தரணி மாஸ் யூசுப், அரசின் பொறுப்புக்கள், சீரான அரச நிர்வாகம் பற்றி எடுத்துக் கூறினார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பணிப்பாளரும் கலந்துகொண்ட இவ் அமர்வில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் சாலி, டாக்டர் யூசுப், எம். அஜிவதீன், எச்.எம். ரிலா, இஸ்மாயில் அஸீஸ், டாக்டர் திருமதி நியாஸ், தஸ்லிம் மௌலவி, ஷூரா சபையின் பொருளாளர் சியாத் இப்ராஹீம் மௌலவி ஆகிவயார் இவ்விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தேசிய சூரா சபையின் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் நன்றியுரை வழங்கிய இக்கலந்தாலோசனை மன்றத்தில் வை எம் எம் ஏயின் தலைவர் சஹீத் எம் றிஸ்மி, அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தலைவர் எஸ். லுக்மான், அஹதியா சம்வமளன தலைவர் எம். ஆர். எம். சரூக், அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சம்மேளன தலைவர் எம்.இசட்.எம் ஹம்மாத், இதன் செயலாளர் எம் என் எம்.பசுன் டாக்டர் திருமதி ஏ.ஏ.எப். பஸ்லா உட்பட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை, அரசியல் நெருக்கடி நிலை பற்றிய விசேடமான விசேடமாக கருத்திற்கொல்லப்பட்டதுடன் தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்வாறு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும், அதிகாரத்துக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் எத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கலாம் என்பன பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மிக அவசரமாக திட்டமிடப்பட்ட முயற்சிகளில் இறங்காதுவிடின் நாடு மிக பயங்கரமான ஒரு சூழ்நிலைக்கு இன்னும் தள்ளப்படலாம் என்று எல்லோரும் பரவலாக தமது ஆழமான ஆதங்கங்களை வெளியிட்டனர்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு ஆளும் தரப்பினர் காரணமாக இருக்கின்றனர் என்பதை எவராலும் மறுக்க முடியா விட்டாலும், இந்த நாட்டை 70 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவரும் இந்த நிலைக்கு பதில் சொல்லியாக வேண்டும். அவர்களது பிழையான பொருளாதாரக் கொள்கைகளும், இனவாதமும் இந்நாட்டை குட்டி சுவராக்கியுள்ளது. 30 வருட யுத்தத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நாடு படிப்படியாக வீழ்ச்சி கண்டு இன்றைய மோசமான வீழ்ச்சி நிலையையும் வங்குரோத்து நிலையையும் அடைந்திருக்கின்றது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

பொருளாதாரரீதியாக முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய சமூகங்களும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வீட்டுத் தோட்டங்களில் பயிர்களை நடும் திட்டம் ஒன்றை அமுல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய சூரா சபை, ஏனைய அரசியல் சமூக சமயத் தலைவர்களையும் அழைத்து இப்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான மூலோபாய திட்டங்கள் பற்றியும், அவற்றை அமுலாக்கும் விதம் பற்றியும் தீர்மானிக்க வேண்டும் என்றும் அதற்காக இதுபோன்ற சந்திப்புக்களை தேசிய சூரா சபை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...