நாட்டில் ஏற்பட்டு வன்முறைகள் தொடர்பில் ஐ.நா கவலைகொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்போது, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற அமைதியான போராட்டம் கலவரமாக மாறியபின் அதன் பின்னர் இலங்கையில் அபிவிருத்திகளையும் மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை தற்போது அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை , நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐநா கவலை கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அனைத்து குழுக்களும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.