இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை மக்கள் இன்னும் அறியவில்லை: துமிந்த ஹுலங்கமுவ!

Date:

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து பெரும்பான்மையான மக்கள் இன்னும் அறியவில்லை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நமது நாட்டு மக்களுக்கு நிலைமையின் தீவிரம் தெரியுமா என்று தெரியவில்லை? என்றும் அவர் கூறினார்.

இந்த வாரம் IMF உடன் பேச்சுக்களை தொடங்கவில்லை என்றால், நிதி ஆலோசகரை நியமித்து நமது கடனை மறுசீரமைக்க முடியாது. ஜூலை மாதம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும். அதை நம் கையிருப்பில் இருந்து செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால், நமது வருமானம் அனைத்தையும் கூட்டி பில்லியன் டொலர்களை அடுத்த இரண்டு மாதங்களில் இறக்குமதி இல்லாமல் சேமிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்த நாட்டில் மருந்து, மின்சாரம், எண்ணெய், எரிவாயு எதுவும் இருக்காது.

இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி மே மாதம் இறுதி வரை தொடரும் எனவும் பிறகு எப்படி எரிபொருள் கிடைக்கும்? நிலைமை மிகவும் தீவிரமானது. IMF உடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் இருக்க வேண்டும்.அரசாங்கம் இருக்க வேண்டும். விரைந்து செயல்படாவிட்டால் ஜூன் மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இருளில் மூழ்கிவிடும்.

நமது நாட்டின் தற்போதைய நிலவரப்படி, ஒரு பில்லியன் இல்லை, 100 மில்லியன் கூட கொடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...