காலி, கொக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் 325 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று (19) உண்ட உணவில் விஷம் கலந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இக்குழுவினருக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் வைத்தியசாலையில் உள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
முதல் இணைப்பு
காலி – கொக்கலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு விஷம் காரணமாக கராப்பிட்டியவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அருகிலுள்ள வைத்தியசாலைகளிலும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என ஊழியர்கள் புகார் தெரிவித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு சாப்பிட்டு வந்த ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.