திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகம பொமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘மக்கள் வேடிக்கைக்காக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள், மக்கள் வாழ வழி இல்லை, அதுதான் அவர்களை வீதிக்கு கொண்டுவருகிறது டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் பேரணியாக செல்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தயிினர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.
இதேவேளை கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரி வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.