ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையான 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.
ஏப்ரல் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு மணிநேரம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.