கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்துண்டிப்பு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இன்று முதல் பாடசாலை விடுமுறையை வழங்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் முன்னதாக கோரியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, வடக்கு, வடமேல் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் தவணைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையால் 6 முதல் 13 வரையான தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இதன்படி மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தவணைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஏனைய மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்களாயின் அதற்கான அனுமதியை மாகாண கல்வி பணிப்பாளர் ஊடாக அதிபர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணிக்குழாமினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...