காலி முகத்திடல் மைதானத்தில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கலந்துகொண்டார்.
பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இச்சம்பவம் ஒழுக்கமான சேவையான இலங்கை பொலிஸாரை கடுமையாக இழிவுபடுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீருடையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போராட்டத்ரத முன்னெடுப்பது போன்ற வீடியோக்கள் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.
பொலிஸ் அதிகாரி கொழும்பு கோட்டை பொலிஸாரால் வியாழக்கிழமை (ஏப்ரல் 14) கைது செய்யப்பட்டார்.