தற்போதைய நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பெடுத்து நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.