நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக, நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ஆஸ்கர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டது!

Date:

நிகழ்ச்சி தொகுப்பாளரான கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியது மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஓஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதேவேளை ‘அகாடமியின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன், மதிக்கிறேன்’ என்று ஸ்மித் பதிலளித்தார். கடந்த வாரம் கூட்டத்தின் போது அவர் அகாடமியில் இருந்து முன்கூட்டியே இராஜினாமா செய்தார், அவரது நடவடிக்கைகள் ‘அதிர்ச்சியூட்டும், வேதனையான மற்றும் மன்னிக்க முடியாத செயலாகும்.

எனினும் ஸ்மித்; வென்ற ஆஸ்கார் விருதை வைத்துக்கொள்வார், மேலும் 10 வருட காலத்திற்குள் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கும் மேலும் வெற்றி பெறுவதற்கும் அவர் தகுதியுடையவராக இருப்பார்.

94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார்.

அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...