நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இன்றைய தினம் (18) ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக எரிபொருள் ஏற்றிச் செல்வதற்காக போதிய எண்ணிக்கையிலான கொள்கலன்கள் (டேங்கர்கள்) வராததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாளாந்தம் சுமார் 450 டேங்கர்கள் எரிபொருள் ஏற்றிச் செல்வதாகவும், நேற்று (17) 300க்கும் குறைவான டேங்கர்களே எரிபொருள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்; தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை வந்தடைந்துள்ள 37,500 மெற்றிக் தொன் பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் இன்று செலுத்தப்படவுள்ளன.
அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் உரிய பெற்றோல் சரக்கு இறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.