நாடு முழுவதும் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது: பிரதமரின் கால்டன் வீடு முற்றுகை!

Date:

நாடு முழுவதும் பல பகுதிகளில் இன்றும் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதி காலி பஸ் நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளது.

மேலும், தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல், எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் காரணமாக, பலபிட்டிய நகரிலும் காலி வீதி முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை கொழும்பில் காலி முகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நேற்றைய போராட்டத்தின் போது, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் ‘குறைந்தபட்ச பலத்தை’ பிரயோகித்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.

08 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மாத்தறை நகரில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென சில எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இன்றைய தினம் நாடாளவிய ரீதியில் பல தொழிற்சங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ரம்புக்கனையில் நேற்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Popular

More like this
Related

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...