தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் இரசாயன உரங்களுக்கு தடை விதித்தமையே என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதேயாகும், 20ஆவது திருத்தச்சட்டத்தை இந்த அரசு நிறைவேற்றும் போது நாடாளுமன்றுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு நாடாளுமன்றில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் நாங்கள் நாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு முன்வருவதாகவும் கிரியெல்ல எம்.பி. குறிப்பிட்டார்.