நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது!

Date:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் 20ஆவது திருத்தம் உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்களுக்கான புதிய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

குறித்த பிரேரணை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இந்த யோசனையை கையளித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரேணையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், மூன்று தரப்பு அதிகாரம் மற்றும் இருப்பு முறைகளில் திருத்தம், 20வது திருத்தத்தை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல ஜனநாயக அம்சங்கள் இந்த மசோதாவில் அடங்கியுள்ளன. .

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...