முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனியார் ஜெட் விமானத்தில் தெரியாத இடத்திற்கு நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை என ஆங்கில ஊடகமொன்று உறுதிசெய்துள்ளது.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் (ரத்மலானை) பிரதான விமான நிலைய முகாமையாளர் இந்தத் தகவல்கள் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.
மேலும்,’சம்பந்தப்பட்ட சர்வதேச புறப்பாடு கப்பலில் உள்ளூர் பயணிகள் இல்லை. இரண்டு பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாத்திரமே அந்த விமானத்தில் இரத்மலானை ஊடாக புறப்பட்டுள்ளனர்’ என்றும் அவர் கூறினார்.
புறப்பட்ட இரண்டு பயணிகளும் மார்ச் 29 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த N 750 புகு தனியார் ஜெட் விமானத்திலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பசில் ராஜபக்ஷ லங்கா மருத்துவமனையில் அவருக்கு கொரோனா இருப்பது புகைப்படம் வெளியாகியுள்ளது. குறித்த புகைப்படத்தில் முகமூடி அணியாமல் சிரித்துக்கொண்டே இருக்கிறர்