புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் அங்கம் வகிக்கவுள்ளதாகவும் சுமார் 10 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அலி சபேர், பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்களான டொக்டர் ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா, திலும் அமுனுகம ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அரசாங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட அமைச்சரவை கடந்த 3ஆம் திகதி இராஜினாமா செய்தது.
ஆனால் அடுத்த நாள், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் வழமையான பணிகளை மேற்கொள்வதற்கு மூன்று அமைச்சர்களை மட்டுமே ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.