புத்தாண்டுக்கான சிறப்பு ரயில் சேவைகள்:’திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகள் இயங்காது’

Date:

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கும் என்பதால், புத்தாண்டு காலத்தில் மக்கள் வசதியாக பயணிக்க சிறப்பு மற்றும் நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படலுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 8) முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை சிறப்பு மற்றும் நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அந்தவகையில், கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பதுளைக்கு இடையில் நகரங்களுக்கிடையிலான மற்றும் விரைவு ரயில் சேவைகள்இயங்கும்.

கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவை இன்று மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) மாத்திரம் இயக்கப்படவுள்ளது.

24 இன்டர்சிட்டி மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வார இறுதி நாட்கள் உட்பட வடக்குப் பாதையில் தினசரி சேவையில் இருக்கும்.

புத்தளம் மார்க்கத்தில் 8 புகையிரதங்களும், கரையோரப் பாதையில் 19 ரயில்களும் இயக்கப்படுவதுடன் பயணிகளின் பயணத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை , போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்

அதனால் தற்போது இருக்கும் பேருந்துகளில் தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் தொலைதூர பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டார்.

எனவே, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...