கல்வித்துறையில் பெரும் பங்காற்றிய போராசிரியர் சோ. சந்திரசேகரன் காலமானார்!

Date:

இலங்கையின் கல்வித்துறையில் பெரும் பங்காற்றிய போராசிரியர் சோ. சந்திரசேகரன் (77) காலமானார்.

மாரடைப்புக் காரணமாக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற அவர் பின்னர் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்தார்.

இதேவேளை 1963 ஆம் ஆண்டு பேராதனை மற்றும் ஜப்பான் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கொழும்பு பல்கழைக்கழகத்தின் இணைப்பேராசிரியர், பேராதனை பல்கலைக்கழகத்தின் போதனா ஆசிரியர் இலங்கை மத்திய வங்கியின் மொழிப்பெயர்ப்பாளர் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் கடமையாற்றியுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் தமிழர் கல்வி புதிய நூற்றாண்டுக்கான கல்வி இலங்கை இந்தியர் வரலாறு போன்றவற்றுடன் மலையககல்வி அபிவிருத்தி தொடர்பான பல நூல்களையும் சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...