அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது கோட்டாகோகம பகுதிக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் உரிமைகளை மீறுவதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து நேற்று முதல் தினமும் கோட்டா கோமாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக நேற்று இரவு 9.00 மணியளவில் காலி முகத்திடல் பகுதிக்கு பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்தனர்.
இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வுப் பணிப்பாளர் தலைமையிலான குழுவொன்று காலி முகத்திடல் கோட்டகோகமவிற்கு விஜயம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தது.
இதேவேளை கையடக்கத் தொலைபேசி சிக்னல்கள் இல்லாதது குறித்தும் போராட்டக்காரர்கள் கமிஷன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இதேவேளை பிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
அமைதியாக ஒன்றுகூடுவதற்கு பிரஜைகளுக்கு உள்ள உரிமை, அரசியலமைப்பு ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.