ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், ரம்புக்கன சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை பொலிஸார் மேற்கொள்ளும் என்றும், அதனால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
‘அனைத்து பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றும் அவர் கூறினார்.