பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறையை அறிவிக்குமாறு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நீண்ட மின்வெட்டு காரணமாக சிறுவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.